ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

By Swetha on ஆனி 27, 2026

Spread the love

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது, அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டு மூலம் ஒரு பொருளை நொறுக்குவது போன்ற பழைய வீடியோ அண்மையில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சரத்குமார், தனது குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதற்காகவே அதை அவ்வாறு நொறுக்கியதாகத் தெரிவித்தார். இந்த விளக்கத்தை கேலி செய்யும் வகையில் பேசிய கீதா ஜீவன், அமைச்சர் கூறுவது உண்மையென்றால் அவர் பொதுவெளியில் ஏடிஎம் கார்டை வைத்து மாத்திரையை நொறுக்கி நேரடி டெமோ காட்ட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ-வான சரத்குமார் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை மறுத்து அவரது குடும்பத்தினருடன் கூட்டு வீடியோ வெளியிட்ட பிறகும், எதிர்க்கட்சியினர் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து வருகின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வீடியோ பரப்பப்படுவதாக அமைச்சர் தரப்பு கூறினாலும், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனின் இந்த டெமோ கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது