Connect with us

மொத்த அன்பும் ஒருத்தவங்க மேல தான்னு நெனச்சோம்.. 11 வருஷம் கழிச்சி 2-வது குழந்தை பெத்துக்கிட்டது இதனால தான்.. மனம் திறந்த காயத்ரி..

CINEMA

மொத்த அன்பும் ஒருத்தவங்க மேல தான்னு நெனச்சோம்.. 11 வருஷம் கழிச்சி 2-வது குழந்தை பெத்துக்கிட்டது இதனால தான்.. மனம் திறந்த காயத்ரி..

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியின் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் நடிகை காயத்ரி யுவராஜ். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர், சில வருடங்களுக்கு முன்னால் டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் கொண்டார்.  இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சில ஆட்களுக்கு முன்னால் காயத்ரியும், அவரது கணவரும் லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்தனர்.

அதில் காயத்ரி பேசும் போது, “ நான் உண்மையில் மகன்தான் பிறப்பான் என்று நினைத்தேன். ஆனால் இவர்தான் இல்லை… இல்லை… கண்டிப்பாக பெண் குழந்தை தான் எனக்கு வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.   பிரசவம் முடிந்து குழந்தை வெளியே வந்த பின்னர் கூட எனக்கு பெண் குழந்தைதான் பிறந்து இருக்கிறதோ, என்ற சந்தேகம் இருந்தது. உடனே நான் மருத்துவரிடம் எனக்கு பிறந்தது ஆண் குழந்தை தானே என்று கேட்டு விட்டேன்.. இதைக்கேட்ட டாக்டர் குழந்தையை என்னிடம் எடுத்து காண்பித்து, இல்லை பெண் குழந்தை தான் பார் என்று சொன்னார்.

எங்களுடைய மகனுக்காக தான் 11 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் இவளை பெற்றெடுத்தோம். எதனால என்றால், எங்களுடைய மொத்த அன்பையும் அவனுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் நாங்கள் அவன் பிறந்த அடுத்த சில வருடங்களில் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை.

   


ஆனால் எங்கள் மகனுக்கு இன்னொரு துணை வேண்டும் என்று நினைக்கவில்லை, அவனே எங்களிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் என்னுடன் விளையாட தங்கையோ தம்பியோ இல்லை என்று, அவனுடைய ஏக்கம் எங்களுக்கு புரிய ஆரம்பித்தது. அதன் பின்னர்தான் நாங்கள் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தோம்.  உண்மையில் அவன் இதனை எப்படி எடுத்துக் கொள்வான் என்பது குறித்தான சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால் அவன் பாப்பாவை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்கிறான். தயவு செய்து ஒரு குழந்தையோடு நிப்பாட்டி விடாதீர்கள். அந்த குழந்தைக்கு இன்னொரு ஆதரவு வேண்டும்.

 
author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top