அவன் யாருங்க..? கமல் சொன்ன அந்த வார்த்தையால் அன்றோடு அந்த விஷயத்தை விட்ட கௌதம் மேனன்..!

By Soundarya on தை 21, 2025

Spread the love

கமலஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் ரிலீஸ் ஆகி படுதோல்வி சந்தித்தது. மேலும் படம் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு இந்தளவுக்கு மோசமான விமர்சனங்களை கமல் உள்ளிட்ட பட குழுவினர் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். படத்தை ஓட வைப்பதற்காக கமலஹாசன் பட குழுவினரோடு பட நாடுகளுக்கு சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.

   

ஆனால் படம் எடுபடவில்லை. அவருடைய நடிப்பில் அடுத்து தக் லைப் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார். இதனையடுத்து அன்பு அறிவு ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இந்தியன்3 படமும் ரிலீஸ் ஆகஉள்ளது. இந்நிலையில்  ஒரு படப்பிடிப்பின் போது இயக்குனர் அவருக்கு ஒரு காட்சி. விளக்கும்பொழுது நடித்துக் காட்டி இருக்கிறார். இது கமலஹாசனை கோபப்படுத்தியுள்ளது அதாவது, கமலஹாசன் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி படமாக மாறிய படம் வேட்டையாடு விளையாடு.

   

 

இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போதும் ஹிட்டடித்தது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படப்பிடிப்பின் போது ஒரு காட்சி விளக்கும்பொழுது அசைவுகளுடன் சொல்லி விளக்கி இருக்கிறார் கௌதம் மேனன். இது கமலஹாசனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தன்னுடைய கோபத்தை வேறு யாரிடமோ “அவன் யாருங்க எனக்கு நடிப்பு சொல்லி கொடுக்க?” என்று கேட்டுள்ளார்.

இது கௌதம் மேனின் காதில் விழுந்ததால் அதிலிருந்து கமலிடம் காட்சி விளக்குவதை  நிறுத்திவிட்டாராம். இது குறித்து சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் கௌதம் மேனன். அதேபோல அந்த படத்தில் வரும் கண்ணு வேண்டும் என்று கேட்டியாமே? எனும் காட்சியை படமாக்கும் போது கமலஹாசன் தான் தன்னுடைய கண்களை விரித்து காட்டினார். அது எங்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது. மேலும் அந்த காட்சி பெறும் வரவேற்பு பெற்றது என்றும் கூறியுள்ளார்.