கமல் எவ்வளவோ சொல்லியும் தசாவதாரம் பட வாய்ப்பை நிராகரித்த கௌதம் மேனன்.. இந்த சின்ன மேட்டர்தான் காரணமா?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார்.

   

அப்படிதான் காக்க காக்க திரைப்படத்தை இயக்கிய கௌதம் மேனனை தன்னுடைய படம் ஒன்றை இயக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அவரை சந்தித்த போது தசாவதாரம் கதையை சொல்லி அதை இயக்க சொல்லி கேட்டுள்ளார். முதலில் அதற்கு ஒத்துக்கொண்ட கௌதம் மேனன் சில நாட்கள் சென்றதும் அதில் தயக்கம் காட்டியுள்ளார்.

ஏனென்றால் கமலின் அவ்வளவு பெரிய பார்வையை தன்னால் திரையில் கொண்டுவர முடியுமா என தயங்கியுள்ளார். மேலும் அப்போது அவருக்கு ஒரே நடிகரே இரட்டை வேடத்தில் நடிப்பது பிடிக்காத ஒன்றாக இருந்துள்ளது. மேலும் அவருக்கு டபுள் ஆக்ட் காட்சிகளை படமாக்கவும் அப்போது தெரியாதாம். அதனால் கமலிடம் அதை எடுத்து சொல்லிவிட்டு அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

அதன் பின்னர்தான் தசாவதாரம் படத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என முடிவு செய்த கமல், அவரிடம் கதை எதாவது இருக்கிறதா எனக் கேட்டுள்ளார். அப்போது கௌதம் சொன்ன கதைதான் வேட்டையாடு விளையாடு. தசாவதாரம் படத்துக்கு முன்பாக அந்த படத்தில் நடித்துவிடலாம் என முடிவு செய்த கமல் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கமலின் திரை வாழ்க்கையில் மிகவும் ஸ்டைலிஷான ஒரு படமாக இன்றளவும் வேட்டையாடு விளையாடு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.