கேஸ் தட்டுப்பாடு… மத்திய அரசு போட்ட சூப்பர் பிளான்… இனி கவலையயேயில்லை…!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் சப்ளையும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் கேஸ் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலைச் சமாளிக்க, ரஷ்யா மற்றும் ஜப்பானிடம் இருந்து LPG கேஸை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாடுகளுடனான ஒப்பந்தத்தின்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவுக்குத் தேவையான கேஸ் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சீர்செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.