சமையல் கேஸ் சிலிண்டருக்கான E-KYC நடைமுறையை முடிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (செப்டம்பர் 7) நிறைவடைகிறது. எரிவாயு நுகர்வோரின் விபரங்களை உறுதிசெய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறைக்கான அவகாசம், ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டுவிட்டதால், இனிமேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள் எவ்வித தாமதமும் இன்றி, உடனடியாகத் தங்களின் சமையல் எரிவாயு முகவர் (Gas Agency) நிலையத்திற்கு நேரில் சென்று தங்களின் E-KYC பதிவை உடனடியாக நிறைவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் இலவச மற்றும் மானிய விலையிலான கேஸ் இணைப்பு பெற்றவர்கள், இன்றுக்குள் இந்த E-KYC பதிவை முடிக்கத் தவறினால், அவர்களுக்கான மத்திய அரசின் கேஸ் மானியம் இனி வழங்கப்பட மாட்டாது. மேலும், நீண்ட நாட்களாக E-KYC புதுப்பிக்கப்படாத இணைப்புகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், மானியத் தொகையைத் தொடர்ந்து பெறவும் நுகர்வோர்கள் உடனடியாகத் தங்களது ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டையுடன் கேஸ் நிறுவனத்தை அணுகி E-KYC செயலாக்கத்தை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
