Connect with us

இது கிப்ட்டா இல்ல சம்பள பாக்கியா..? கருடன் படத்தின் வெற்றி.. நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி பரிசு..!

CINEMA

இது கிப்ட்டா இல்ல சம்பள பாக்கியா..? கருடன் படத்தின் வெற்றி.. நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி பரிசு..!

 

கருடன் திரைப்படத்தின் வெற்றியால் நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி பரிசாக வழங்கியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்கின்றார் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தை பெற்றார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசதி வந்தார்.

   

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தொடங்கி அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் வரை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வந்த சூரி விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்த சூரிக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் ஹீரோவாக நடிப்பதற்கு அமைந்து வருகின்றது. அப்படி துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கருடன். இந்த திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் சூரிக்கு சம்பளமாக 2.5 கோடி தான் அட்வான்ஸ் தொகை கொடுத்திருந்தார் தயாரிப்பாளர். மேலும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூரியின் மேனேஜர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர் ஒரு காஸ்ட்லியான கிப்ட் பரிசாக வழங்கியிருக்கின்றார்.

பிஎம்டபிள்யூ காரில் எக்ஸ் 7 மாடலில் அமைந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கின்றார், இதன் விலை ஒரு கோடியே 35 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இனி சூரி ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் அதைத்தொடர்ந்து கொட்டுக்காளி என இரண்டு திரைப்படங்களிலும் இவர் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top