தமிழகத்தில் “கஞ்சா ஆம்லெட்” விற்பனை அமோகம்… பரபரப்பை கிளப்பிய எடப்பாடி பழனிச்சாமி..!!

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகளில் கூட்டணி அமைப்பது, வாக்காளர்களை கவரும் விதமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் .அதிமுக சார்பாக மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற முழக்கத்தோடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டது. கஞ்சா சாக்லேட் வந்துவிட்டது. அடுத்து ஆம்லெட்டில் கூட கஞ்சா ஆம்லெட் வந்துவிட்டது என்று கூறுகிறார்க.ள் தமிழகம் போதை பொருளால் சீரழிந்து விட்டது. இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் இதுபற்றி சட்டசபையில் பலமுறை நான் பேசினேன். ஆனால் அவற்றையெல்லாம் அப்போது கண்டுகொள்ளாத முதல்வர் இப்போது தாமதமாக விழித்துக் கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை நடக்கிறது. அது உண்மைதானே” என்று கூறியுள்ளார்.