மதுரையில் நடைபெற்ற தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிமுக பேச்சாளரும், நடிகருமான கஞ்சா கருப்பு, ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் குறித்த அறிவிப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சினிமாவில் தாம் பேசிய வசனத்தை போலவே, மது அருந்துவிட்டு ஆண்கள் பாதுகாப்பாக வீடு சென்று சேர இந்த இலவச பேருந்து வசதி உதவும் என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
“வேங்கை” திரைப்படத்தில் தான் பேசிய நகைச்சுவை காட்சியை நினைவு கூர்ந்த அவர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்காமல், அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தனி பேருந்து வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் எனப் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் வாக்குறுதியை வரவேற்றார். தாம் படம் எடுத்துப் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும், அதனால் தனக்கும் ஒரு வீடு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இனி ஒருபோதும் திரைப்படம் எடுக்கப் போவதில்லை என விரக்தியுடன் தெரிவித்த அவர், “அடுத்த பிறவியில் பாம்பாகப் பிறந்தால் கூடப் படம் எடுக்க மாட்டேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார். அதிமுகவின் இந்தத் தேர்தல் வாக்குறுதிகளை ஆதரிக்கும் விதமாக அவர் பேசிய விதம் அங்கிருந்தோரிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…