செம ஷாக்..! காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடை திறக்க வேண்டும்… தமிழக அரசுக்கு கஞ்சா கருப்பு கோரிக்கை..!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

நடிகர் கஞ்சா கருப்பு, ‘மக்கள் தலைவா’ பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் டாஸ்மாக் கடை திறப்பு நேரம் தொடர்பாக பெரும் சர்ச்சைக்குரிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். தற்போதைய ஆட்சியில் இரவு 9:45 மணிக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை மூடிவிடுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால், டாஸ்மாக் கடைகளை காலையில் 7 மணிக்கு திறந்து இரவு 12 மணி வரை நடத்த வேண்டும் என்றும், இதனை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கஞ்சா கருப்புவின் இந்த விசித்திரமான மற்றும் சர்ச்சையான கோரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.