“நட்சத்திர ஹோட்டலில் நள்ளிரவு ஆக்ஷன்”… துப்பாக்கி முனையில் சிக்கிய வடசென்னை டான்… கிண்டியில் அரங்கேறிய சினிமா பாணி கைது….!

By Nanthini on ஆடி 9, 2026

Spread the love

வடசென்னையைச் சேர்ந்த பிரபல ஏ+ (A+) வகை தாதாவான எண்ணூர் தனசேகர் (47) என்பவரை போலீஸார் துப்பாக்கி முனையில் அதிரடியாகச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த இவர் மீது கொலை, கொள்ளை மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களைப் மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது, அவர் பிடிபடாமல் நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார்.

அவரைப் பிடிக்க ஆவடி காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான எண்ணூர் தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனசேகர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவில் போலீஸார் அந்த ஹோட்டலை அதிரடியாகச் சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

   

போலீஸார் சூழ்ந்திருப்பதை அறிந்த தனசேகர், தப்பி ஓட வழி தெரியாமல் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, போலீஸார் துப்பாக்கி முனையில் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். நள்ளிரவில் நடந்த இந்த அதிரடி ஆக்ஷனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தனசேகரிடமிருந்து ஒரு துப்பாக்கி, சொகுசு கார் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.