ரஜினி படத்தோடு துணிந்து மோதி சூப்பர் ஹிட் கொடுத்த கங்கை அமரன்.. அட பிரபு நடித்த அந்தப் படமா அது..?

Spread the love

சினிமாவை பொறுத்த வரையில் எந்த நடிகரின் படம் எப்போது ஹிட் அடிக்கும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் ஓடாமல் தோல்வியடையும். அந்தப் படத்தோடு வெளியான ஒரு சின்ன படம் சூப்பர் ஹிட் அடித்து விடும். ரசிகர்களுக்கு எது பிடிக்கின்றதோ அந்த படம் நன்றாக ஓடும். சமீபத்தில் கூட பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடவில்லை. ஆனால் சிறிய பட்ஜெட்டுகளில் உருவான குடும்பத்தார் மற்றும் டிராகன் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்தது.

எனவே நல்ல கதையும் ரசிகர்களை கவரும்படி திரைக்கதையும் இருந்தால் படம் ஓடும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் எடிட்டர் போன்ற துறைகளில் இருந்து இயக்குனராக பலரும் மாறி உள்ளனர். ஆனால் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆகிய அவதாரங்களை எடுத்து இயக்குனராக மாறிய ஒரே ஒரு பிரபலம் என்றால் அது கங்கை அமரன் மட்டுமே. அவர் இயக்கிய கோழி கூவுது திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார். அவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் பிரபுவும் ராமராஜனும் ஹீரோவாக நடித்தார்கள்.

ராமராஜனை வைத்து கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மயில் கல்லாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தின் சில திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஒரு வருடம் எல்லாம் ஓடியது. அதனைப் போலவே பிரபுவை வைத்து கோழி கூவுது, பொழுது விடிஞ்சாச்சு, கும்பக்கரை தங்கையா மற்றும் சின்னவர் போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். அதில் கும்பக்கரை தங்கையா திரைப்படம் 1991 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ரஜினியின் தர்மதுரை திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனால் கும்பக்கரை தங்கையா பட தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். ரஜினி படத்தோட ரிலீஸ் செய்வதால் வசூல் இருக்காது என்று பயந்த அவர் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாம் என்று கங்கை அமரனிடம் கூறியுள்ளார். ஆனால் படத்தின் மீது நம்பிக்கை கொண்ட கங்கை அமரன் இந்த படம் கண்டிப்பாக ஓடும் தைரியமாக ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்ல அவ்வாறே ரிலீஸ் செய்யப்பட்டு அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

1 மணத்தியாலம் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

2 மணத்தியாலங்கள் ago