Categories: சினிமா

‘நான் பாட்டு பிடிக்கலைன்னா இளையராஜா மாத்திடுவாரு’… ஹிட் பாடல் நல்லா இல்லைன்னு குட்டைய குழப்பிய கங்கை அமரன்… நல்ல வேள தப்பிச்சது!

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார். 80 களில் அவரை ஒரு கடவுள் போல நினைத்த இளம் இயக்குனர்கள் அவர் இசைக்காகவே திரைக்கதை எழுதி படமெடுத்தார்கள்.

#image_title

அதில் முக்கியமானவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். அவர் இயக்கிய முதல் படமான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் ஒரு ம்யூசிக்கல் ஹிட்டாக அமைந்தது. பாடல்களுக்காகவே அந்த திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது என்றால் அது மிகையாகாது. அந்தளவுக்கு அந்த படத்தில் அனைத்தும் ஹிட்டாகின.

இந்நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பற்றி பேசிய கங்கை அமரன் “நான் ஒரு பாடல் நல்லா இல்லைன்னு சொன்னா  எங்க அண்ணன் உட்னே மாத்திடுவாரு. அப்படிதான் பயணங்கள் முடிவதில்லை படத்துல இருக்குற ‘சாலையோரம் சோலை ஒன்று’ என்ற பாடல் எனக்குப் பிடிக்கவில்லை. மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது அது சுமார்தான் என சொன்னேன்.

அதனால் அந்த பாடலை மாற்றிவிடலாம் என இளையராஜா சொல்லிவிட்டார். ஆனால் இயக்குனர் சுந்தர்ராஜனோ பாடல் நன்றாகதானே இருக்கிறது என்றார். ஆனாலும் வேறு நல்ல பாடலை போடலாம் என்றார் இளையராஜா. ஆனால் அவருக்கு நேரம் இல்லாததாலும் படத்தின் ரிலீஸ் நெருங்கி விட்டதாலும் அந்த பாடலை மாற்றவில்லை. அதனால் அந்த பாடல் தப்பித்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“காசு இல்லங்க…” 3 மாதமாக கண் வலியில் துடித்த 5 வயது சிறுவன்… தவித்த பெற்றோர்… பழங்குடியினத் தலைவர் மற்றும் வங்கி ஊழியர்களின் உதவி… குவியும் பாராட்டுகள்…!!

மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…

2 minutes ago

இனி எந்த பயமும் இல்லை… பயணத்தில் மீண்டும் ஆபத்தில் சிக்காமல் இருக்க… பெங்களூரு பெண் செய்த அதிரடி காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…

6 minutes ago

“ராகுல் காந்தியை அலேக்காக தூக்கிய போலீஸ்…” டெல்லியை உலுக்கிய பிரம்மாண்ட எதிர்க்கட்சி போராட்டம்…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…

9 minutes ago

ஐயோ…! “திடீரென குறுக்கே பாய்ந்த காளை:” பைக்கோடு தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…

17 minutes ago

என்னது… புது iPhone Pro இப்பவே லீக் பண்ணிட்டாரா?… கார்த்திக் ஆர்யன் போட்ட போட்டோவால்… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… இணையத்தில் வைரல்…!!

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் லண்டன் ஐ பின்னணியில் நின்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில்…

23 minutes ago

கைநிறைய சம்பளம் வாங்கலாம்…! பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான 'பேங்க் ஆஃப் பரோடா' 'வெல்த் எக்ஸிகியூட்டிவ்' மற்றும் 'கிரெடிட் அனலிஸ்ட்' ஆகிய பதவிகளுக்கு…

28 minutes ago