#image_title
தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.
கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.
ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.
#image_title
இப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையின் பல மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய நெருங்கிய நண்பரான மனோபாலாவோடு இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “அப்போது மனோபாலா ஒரு படம் பண்ணி அது தோல்விப் படமாக அமைந்தது. அதனால் அவருக்கு வேறு படம் கிடைக்கவில்லை.
அப்போது என்னிடம் வந்து “நீ எனக்கு ஒரு படம் குடுடா. எவனும் கூப்புட மாட்றான். இப்ப செலவுக்காவது காசு குடு” என சொல்லி பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து செல்வான். அந்த அளவுக்கு எங்களுக்குள் நட்பு இருந்தது. ஒரு நாள் திடீரென்று “நீ படம் கொடுக்கலன்னா நான் தற்கொலை செஞ்சிப்பேன்” என சொல்லிவிட்டு போய்விட்டான். எனக்கு அப்போது சங்கடமாக இருந்தது.
அதன் பிறகுதான் நாங்கள் இணைந்து பிள்ளை நிலா என்ற படமெடுத்தோம். அது வெற்றிப்படமாக அமைந்தது. மனோபாலா நல்ல திறமையான இயக்குனர். அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பது வருத்தமான விஷயம்” எனக் கூறியுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…