பவதாரணிக்கு இறப்புக்கு கூட வராத இளையராஜாவின் உடன் பிறந்த தம்பி.. கங்கை அமரன் வராததற்கு இது தான் காரணமா..?

By Sumathi

Updated on:

இளையராஜாவின் மகள் பவதாரணி, சில தினங்களுக்கு முன் இலங்கையில் கல்லீரல் புற்றுநோயால் இறந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின் தேனியில் உள்ள பண்ணைபுரத்தில் இளையராஜாவின் தாய் மற்றும் மனைவி நினைவிடங்களுக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த துக்க நிகழ்வுகளில் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கலந்துக்கொள்ளவில்லை. இரங்கலும் வெளியிடவில்லை. ஆனால் அவரது வீட்டில் இருந்து அழுதுக்கொண்டு இருந்திருக்கிறார். ஏனெனில் கங்கை அமரனுக்கு மகன்கள் தானே தவிர, மகள் இல்லை. அதனால் அவருக்கு பவதாரணிதான் மகள் என்ற நிலையில் வாழ்ந்தவர்.

   

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில், பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, இளையராஜா இசையில் மேதாவி. ஆனால் அவரது மறுபக்கம் மிக மோசமானது. அருவெறுப்பானது. அதைப்பற்றி பேசுவதே அசிங்கம். அண்ணன் இளையராஜாவுக்கு பலவிதங்களில் உதவியாக இருந்து, அவரை கேடயமாக பாதுகாத்த கங்கை அமரனை ஒரு கட்டத்தில் வெளியே போடா என துரத்தி விட்டார். அவர் செய்த நன்றி எல்லாம் நினைத்து பார்க்கவில்லை.

பல படங்களில் கங்கை அமரன் எழுதிய பாடல்களுக்கு, பின்னணி இசையமைத்த படங்களுக்கு தன் பெயரை போட்டுக்கொண்டார். உழைத்த கங்கை அமரனின் சம்பளத்தை, இளையராஜா வாங்கிக்கொண்டார். பாஜகவில் இருப்பவர் கங்கை அமரன். அவருக்கு கிடைத்த எம்பி பதவியை, அண்ணனுக்கு கொடுத்து கவுரப்படுத்துங்கள் என்று கூறியவர் கங்கை அமரன்.

பல நேரங்களில் நோட்ஸ் தராமல் இளையராஜா போய்விட்டால் அந்த பணிகளை செய்து முடிப்பவர் கங்கை அமரன். இளையராஜாவை விட, கங்கை அமரனுக்கு இசைஞானம் உண்டு. அதனால் பவதாரணி இறந்த போதும், இளையராஜா முகத்தை பார்க்க பிடிக்காமல் அவரது மகள் பவதாரணியின் இறுதி சடங்கில் கூட பங்கேற்றாமல் இருந்துவிட்டார் கங்கைஅமரன் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Sumathi