உத்திரபிரதேச மாநிலத்தில் வன்முறை கும்பல் ஒன்று இரண்டு தலித் மாணவர்களை ஒரு கம்பத்தில் கைது கட்டி வைத்து திருட்டு குற்றச்சாட்டில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவமானது ஜூலை 22ம் தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார் அளித்த புகார் அடிப்படையில் ஐந்து பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நஹர் தேர் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா தன்னுடைய புகாரில் தன்னுடைய மகன் சுந்தர்(20) மற்றும் அவருடைய உறவினர் ஷானி(22) ஆகியோர் சம்பலில் நடந்த கன்வர் ஊர்வலத்தை பார்க்க சென்றார்கள்.
வழியில் பர்ஹாய் வாழி பஸ்தியை சேர்ந்த சிலர் அவர்களை பிடித்து திருட்டு குற்றம் சாட்டி கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறியுள்ளார். தற்போது இரண்டு இளைஞர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
