உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு ரவுடிக் கும்பல், அந்த வாலிபரைச் சூழ்ந்து கொண்டது.
கையிலிருந்த தடிகள், கம்புகள் மற்றும் இரும்புத் தண்டுகளால் அந்த வாலிபரை நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர். தனக்கு என்ன நடக்கிறது என்று யோசித்து மீள்வதற்குள், அந்தக் கும்பல் அவரை அடித்துத் துவம்சம் செய்தது.
பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர வெறியாட்டத்தின் காட்சிகள் முழுமையாக அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோட்வாலி மற்றும் வாலட்டர்கஞ்ச் போலிஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட காவாலிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
