குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டத்தில் பாயல் மகப்பேறு மருத்துவமனை அமைத்துள்ளது. இங்கு நோயாளிகளின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா நெட்வொர்க்கில் மிக எளிய பாஸ்வேர்ட் பயன்படுத்தப்பட்டது. இதை அறிந்த ஹேக்கர்கள், சட்டவிரோதமாக கேமரா பதிவுகளை தேடி திருடியுள்ளனர். கடந்த 9 மாதங்களில் இந்த மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு குறைந்த அமைப்புகளில் இருந்து 50,000 வீடியோ காட்சிகளை இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது.
இந்த திருட்டு வீடியோக்களில், பெண் நோயாளிகளின் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளைச் சேர்ந்த மிகவும் தனிப்பட்ட அந்தரங்க காட்சிகள் அடங்கியிருந்தன. முதலில் தனிப்பட்ட டெலிகிராம் சேனல்களில் இவற்றை பரப்பிய ஹேக்கர்கள், பின்னர் யூடியூப் போன்ற பொது தளங்களிலும் பதிவேற்றி பரப்பியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கடுமையாக மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
