“வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…” கடைக்குள் புகுந்து சிறுவனை கத்தியால் குத்திய கொடூரம்… ரத்த வெள்ளத்தில் துடித்து நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தலேகான் தாடே பகுதியில் உள்ள சிவாஜி சௌக் அருகில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில், சமூக வலைதளத்தில் வைக்கப்பட்ட ‘கிங் இஸ் பேக்’ என்ற வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தொடர்பான முன்விரோதம் காரணமாக 16 வயது சிறுவன் மீது அரிவாளால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தேவேந்திர யாதவ் என்ற அந்தச் சிறுவனை மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரெனப் பின்தொடர்ந்து வந்து, தங்களது கையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தலேகான் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   

https://twitter.com/nextminutenews7/status/2112751734569468104?s=20

   

கடைக்கு உள்ளேயே நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மனப்பான்மையைக் கண்டித்து நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.