திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது தாமரைச்செல்வன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியில் அவர் நின்றிருந்தபோது ஒரு கும்பல் அவரைக் கொலை செய்ய விரட்டியது. உயிர் தப்பிக்க அருகில் உள்ள புதிய காவலர் குடியிருப்புக்குள் தாமரைச்செல்வன் ஓடி நுழைந்தார். இருப்பினும் ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரைத் துரத்தி வந்து கொலை வெறியுடன் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு விரைந்த பாலக்கரை போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருக்கும் நிலையில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
