கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரவு நேரத்தில் பணியில் இருந்த 27 வயது ஊழியர் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கதப்பாவைச் சேர்ந்த முகமது ரிபாய் (27) என்பவர் புத்தூர் லாட்ஜில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு வந்த ஃபரூக், சோனு மற்றும் இஷான் ஆகிய மூவரும் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், புத்தூர் டவுன் காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
