அது எப்படி சாத்தியம்…? ரயிலில் பயணம் செய்த தம்பதி…. பூட்டை உடைக்காமல் வைர நகைகளை அபேஸ் செய்த கும்பல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on கார்த்திகை 19, 2025

Spread the love

சென்னையைச் சேர்ந்த அப்துல் நசீர் என்பவர் தனது மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் குயிலாண்டிக்கு மங்களூர் மெயில் விரைவு ரயிலில் ஏசி பெட்டியில் பயணம் செய்தார். அவர் எடுத்துச் சென்ற சூட்கேஸில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன.

குயிலாண்டி சென்று பார்த்தபோது, சூட்கேஸின் பூட்டு திறக்கப்படாமலேயே உள்ளே இருந்த நகைகள் மாயமாகி இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாகக் கோழிக்கோடு ரயில் நிலைய போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். குயிலாண்டி ரயில் நிலையத்தில் சூட்கேஸை இறக்கிவிட சில இந்தி பேசும் நபர்கள் உதவி செய்ததாக நசீர் தெரிவித்ததன் மூலம், பூட்டைத் திறக்காமல் ஜிப்பை கம்பி மூலம் திறந்து கொள்ளையடிக்கும் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

   

ஐஜி அருள் ஜோதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்த நான்கு பேர் முதல் வகுப்பு பெட்டிக்குள் அத்துமீறிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் ஹரியானா மாநிலம் சான்சி என்ற இடத்தில் முன்பதிவு செய்து, மங்களூரில் உள்ள சூரத்கல் என்ற இடத்தில் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

   

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளை மீட்டு அப்துல் நசீரிடம் ஒப்படைத்தனர். பூட்டைத் திறக்காமல் லாவகமாகக் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்த இந்தச் சம்பவம் சக பயணிகளிடையே அச்சத்தையும், ரயில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.