நொடிப் பொழுதில் மாறிய கோலாகலம்…. தலைகீழாகக் கவிழ்ந்த ராட்சத விநாயகர் சிலை… இருவர் பலி…. குழந்தைகள் உட்பட 5 பேர் கவலைக்கிடம்….!

By Nanthini on ஆவணி 23, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பூலேஷ்வர் பகுதியில் உள்ள ஜெய் அம்பே சவுக், கபூதர்கானா அருகே சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் பெரும் சோகம் நிகழ்ந்தது. கணேஷோத்சவ விழாவை முன்னிட்டு மக்கள் பார்வைக்காக கொண்டுவரப்பட்ட ராட்சத விநாயகர் சிலை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சங்கத் நெவ்ஷே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்பாராத விபத்தில் 2 பெண் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), லாவண்யா கானர் (5), திவ்யா கானர் (7) மற்றும் குணால் காஷித் (26) ஆகியோர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் புகழ்பெற்ற கணேஷோத்சவ விழா தொடங்குவதற்கு முன்பே நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.