வடமாவட்டங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அரசியல் ரீதியாகப் செக் வைக்கும் நோக்கில், அவரது சகோதரி காந்திமதி தீவிர வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவர் சமீபத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸில் இணையப் போவதாகக் கூறப்பட்ட நிலையில், தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கிளையைத் தொடங்கி அதன் தலைமைப் பொறுப்பை காந்திமதியிடம் ஒப்படைக்க ரங்கசாமி திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வடதமிழகத்தில் பாமக வலுவாக உள்ள பகுதிகளில் தன் செல்வாக்கை உறுதிப்படுத்தி, அன்புமணியின் அரசியல் ஆதிக்கத்திற்குப் போட்டியாகத் தன் சொந்தக் கொடியைப் நாட்ட காந்திமதியும் தீவிரக் கணக்கு போட்டு வருகிறார்.
