Categories: CINEMA

ஜி வி பிரகாஷை நடிகராக அறிமுகம் செய்ய ஆசைப்பட்ட ஷங்கர்… எந்த படத்தில் என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!

தமிழ் சினிமாவுக்கு பிரம்மாண்ட இறக்கைக் கட்டி பறக்க விட்டவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த அவர் அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வந்தார்.

அவர் இயக்கியதிலேயே ப்ளாப் படம் என்றால் அது பாய்ஸ் திரைப்படம்தான். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இந்த படத்தை இயக்கினார் ஷங்கர். சித்தார்த், ஜெனிலியா, பரத், மணிகண்டன், தமன், நகுல் மற்றும் விவேக் ஆகியோர் நடித்த இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

ஆனால் படத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தாததால் பெரும் தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்துக்காக ஷங்கர் முதலில் நடிக்க வைக்க இருந்தது இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷைதான். ஐந்து நண்பர்களில் ஒருவராக அவரை நடிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்தாராம்.

ஆனால் அப்போது ஜி.வி.பிரகாஷ்குமார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். மேலும் அவருடைய தொடர்பும் சரியாகக் கிடைக்காமல் விட்டுவிட்டதால் அவருக்குப் பதிலாக மற்றொருவரைத் தேர்வு செய்திருக்கிறார்.  அதனால் அப்போதே நடிகராகும் வாய்ப்பு ஜி வி பிரகாஷுக்கு கிடைக்காமல் போயுள்ளது.

ஜி.வி.பிரகாஷ்குமார் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலைப் பாடியிருப்பார். அப்போதிருந்து இயக்குநர் ஷங்கருக்கு ஜி.வி.பிரகாஷ்குமாரை எப்படியாவது தனது படங்களில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதன்படி பாய்ஸ் படத்தில் இவரைத் தேர்ந்தெடுக்க அச்சமயம் அது முடியாமல் போயிருக்கிறது. இத்தகவலை அந்நியன் படத்திற்காக ‘காதல் யானை’ பாடலை பாடப் போன ஜி.வி.பிரகாஷிடம் ஷங்கர் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் ஷங்கர் தயாரித்த வெயில் திரைப்படம் மூலமாக ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகரானார். பின்னர் திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி இப்பொது 25 படங்களில் நடிகராகவும் நடித்து முடித்துள்ளார்.

vinoth

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

9 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

9 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

9 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

10 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

10 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

10 மணி நேரங்கள் ago