#image_title
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கான வாய்ப்புகள் உருவாகி, 80 களில் 90 களில் அவர் உச்ச நடிகரானார். கவுண்டமணி உச்சத்தை தொட்டபோதும் சில இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து குறைவான சம்பளத்துக்கு நடித்து வந்தார். அப்படி ஒரு இயக்குனர்தான் வீ சேகர்.
அப்படி கவுண்டமணி நடித்த படம்தான் ஒன்னா இருக்க கத்துக்கணும். அந்த படத்தில் சிவகுமார் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவருக்கு நிகரான வேடத்தில் கவுண்டமணி நடித்திருந்தார். கிட்டத்தட்ட அவரை அந்த படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். அதனால் அந்த படத்துக்குக் குறைவான சம்பளமே பெற்றுக் கொண்டாராம்.
இதையறிந்த ஏவிஎம் நிறுவனம் அடுத்து தங்கள் படமான எஜமான் படத்தில் நடிக்க கவுண்டமணிக்கு அதே சம்பளத்தையே பேசியுள்ளனர். ஆனால் கவுண்டமனி தான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை சொல்லியுள்ளார். அந்த படத்துக்கு அவ்வளவுதானே வாங்கினீர்கள் என்று ஏவிஎம் நிறுவனம் கேட்டுள்ளது.
அதற்கு “அந்தபடத்தில் நான்தான் ஹீரோ. என்னை ஹீரோவாக போட்டு ரஜினியை காமடியான போட்டு படம் எடுங்கள். நீங்கள் சொல்லும் சம்பளத்தை வாங்கிக் கொள்கிறேன்” எனக் கூறி ஷாக் கொடுத்துள்ளார். இதன் பிறகு ஏவிஎம் நிறுவனம் அவர் கேட்ட சம்பளத்தையே கொடுத்தனராம்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…