#image_title
தமிழ் சினிமாவுக்கு பிரம்மாண்ட இறக்கைக் கட்டி பறக்க விட்டவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த அவர் அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வந்தார்.
அவர் இயக்கியதிலேயே ப்ளாப் படம் என்றால் அது பாய்ஸ் திரைப்படம்தான். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இந்த படத்தை இயக்கினார் ஷங்கர். சித்தார்த், ஜெனிலியா, பரத், மணிகண்டன், தமன், நகுல் மற்றும் விவேக் ஆகியோர் நடித்த இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
ஆனால் படத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தாததால் பெரும் தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்துக்காக ஷங்கர் முதலில் நடிக்க வைக்க இருந்தது இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷைதான். ஐந்து நண்பர்களில் ஒருவராக அவரை நடிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்தாராம்.
ஆனால் அப்போது ஜி.வி.பிரகாஷ்குமார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். மேலும் அவருடைய தொடர்பும் சரியாகக் கிடைக்காமல் விட்டுவிட்டதால் அவருக்குப் பதிலாக மற்றொருவரைத் தேர்வு செய்திருக்கிறார். அதனால் அப்போதே நடிகராகும் வாய்ப்பு ஜி வி பிரகாஷுக்கு கிடைக்காமல் போயுள்ளது.
ஜி.வி.பிரகாஷ்குமார் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலைப் பாடியிருப்பார். அப்போதிருந்து இயக்குநர் ஷங்கருக்கு ஜி.வி.பிரகாஷ்குமாரை எப்படியாவது தனது படங்களில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதன்படி பாய்ஸ் படத்தில் இவரைத் தேர்ந்தெடுக்க அச்சமயம் அது முடியாமல் போயிருக்கிறது. இத்தகவலை அந்நியன் படத்திற்காக ‘காதல் யானை’ பாடலை பாடப் போன ஜி.வி.பிரகாஷிடம் ஷங்கர் கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் ஷங்கர் தயாரித்த வெயில் திரைப்படம் மூலமாக ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகரானார். பின்னர் திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி இப்பொது 25 படங்களில் நடிகராகவும் நடித்து முடித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…