காலையிலேயே அடுத்த பரபரப்பு…. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் ஜி.கே.வாசன்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியின் முக்கிய செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமாகா, அண்மைக்காலத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் இந்த கூட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜக-வின் ‘தாமரை’ சின்னத்தில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் கடுமையான பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தோல்விகளால் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைத் தொடர்ந்து, NDA கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறுவது குறித்து இந்த அவசரச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.