அதிமுகவுக்கு நெருக்கடி..! EPS தலையில் விழுந்த பேரிடி… திடீர் ஷாக் கொடுத்த ஜி.கே வாசன்…!!

By Soundarya on தை 14, 2026

Spread the love

தனது ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜி.கே.வாசன் மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வரும் அவர், தொகுதிப் பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 12 தொகுதிகளைக் கேட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள தொகுதிகளின் பட்டியலைத் தயார் செய்ய ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளார். மேலும், தமாகாவின் பாரம்பரிய அடையாளமான ‘சைக்கிள்’ சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட அவர் உறுதியான முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜி.கே.வாசனின் இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.