பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனிடையே அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ராமதாஸ் முடிவு என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதாக முடிவு செய்யவில்லை. மருத்துவர் ராமதாஸின் முடிவு தான் கட்சியில் இருப்பவர்களின் முடிவு.
அவர் சொல்வதைக் கேட்டு தான் நாங்கள் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விருப்ப மனு கொடுக்கப் போவதில்லை. 46 வருடங்களாக அவருடன் இருக்கிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் என் முடிவாக இருக்கும். அன்புமணி வந்து ராமதாசை சந்தித்து பேசி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஐயா, உங்கள் தலைமையில் கூட்டணி பேசலாம் என்று சொல்லி இருந்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். தமிழகத்தில் கடந்த காலத்தில் இருந்ததைவிட பாமக இன்னும் அதிக வலிமை பெற்றிருக்கும். ஆனால் அவர் தனியாக சென்று கூட்டணி பேசிவிட்டார் என்று ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…