கலிபோர்னியாவில் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக தந்தையிடம் மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்ஸாண்டர் பினோன் என்ற வாலிபர் காலமாகியுள்ளார். அவருடைய பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள தேவாலயத்தில் அலெக்சாண்டர் இன் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளனர். இறுதி சடங்கு நடத்தும் குழுவிடம் தன்னுடைய மகன் இறந்தபோது போட்டிருந்த உடைகளை மாற்றிவிட்டு புதிய உடைகளை போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த உடையை தங்களிடம் தாருங்கள் என்று பெற்றோர் கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இறுதி சடங்கை வழி நடத்திய அனிதா சிங் என்பவர் அலெக்சாண்டர் தந்தையிடம் துணி இருக்கும் ஒரு பையை கொடுத்துள்ளார். அவர் அந்தப் பையை வீட்டுக்கு எடுத்துச் சென்று துணிகளுடன் துவைக்கப்பட்டுள்ளார். அப்போது அந்தப் பையில் இருந்து மூளை ஒன்று வெளிவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த மூளையை அந்த பையில் போட்டு அனிதா சிங்கிடம் கொடுத்தார். பையைப் பெற்றுக் கொண்ட அவர், மன்னிப்பு கேட்கவோ அது யாருடைய மூளை என்பது குறித்த எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
மேலும் அலெக்சாண்டரின் மூளையை ஒரு பாக்ஸில் போட்டு இறுதி சடங்கு இல்லத்தின் வாசலில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இரண்டரை மாதங்களுக்கு பிறகு அந்த மூளை அழுகிய துர்நாற்றம் வீசிய நிலையில் சில வாரங்களுக்கு பிறகு இறுதி சடங்கு இல்லத்திலிருந்து அலெக்சாண்டர் தந்தையை அழைத்து அது அலெக்சாண்டரின் மூளை தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது விசாரணை நடைபெற்ற வருகிறது.
