BREAKING: சற்றுமுன் வங்கிக்கணக்கில் ரூ.1000 வந்தது.. உடனே செக் பண்ணுங்க… முதல்வர் அதிரடி..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, முந்தைய திமுக அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் மாணவர்களுக்கான ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகிய இரு முக்கிய திட்டங்களும் எவ்வித தடையுமின்றித் தொடரும் என்று முதலமைச்சர் விஜய் நேற்று சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த திட்டங்களின் கீழ் தகுதியுள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி உதவித்தொகை நேரடியாக அவர்களின் வங்கிச் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்குப் பின் இத்திட்டங்கள் நிறுத்தப்படுமோ என்ற பயத்தில் இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், “மக்களுக்குப் பயனளிக்கும் முந்தைய அரசின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்ற முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.