BREAKING: கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசின் புதிய அறிவிப்பு… CM விஜய் சொன்ன குட் நியூஸ்….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் வெடித்தன.

இந்த அரசியல் அழுத்தங்களுக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் மத்தியில், தற்போதைய பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளிடையே ஒருபுறம் நிம்மதியைத் தந்தாலும், முழுமையான தள்ளுபடி கோரிய போராட்டக்காரர்களின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.