புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, வேலையிலிருந்து ஊழியர் தானாக விலகினாலோ, நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டாலோ, பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, அந்த நிறுவனம் நிறுவனம் 48 மணி நேரத்திற்குள் முழு தொகையையும் வழங்க வேண்டும். இது வெறும் சம்பளத்திற்கு மட்டும் அல்ல. விடுப்பு பணமாக்கல், போனஸ், ஊக்கத் தொகை உள்ளிட்ட அனைத்து நிலுவைத் தொகைகளும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். இதனால் செட்டில்மென்ட் தொகைக்காக ஊழியர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
புதிதாக ஒரு வேலையில் சேருவதற்கு முன்பு பணத்தை நம்பியிருப்பவர்களுக்கு இந்த முறையானது மிகவும் நன்மை பயக்கும். பெரும்பாலும், வேலை மாறும்போது ஒரு மாதம் குறைக்கப்படுகிறது. மேலும் அடுத்த சம்பளம் வருவதற்கும் கொஞ்சம் நேரம் எடுக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், ஃபுல் அண்ட் ஃபைனல் செட்டில்மெண்டில் ஏற்படும் தாமதம் ஊழியர்களின் நிதி அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தது. எனவே புதிய விதி இந்த சிக்கலை நீக்குகிறது.
