செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய RTO விதிமுறை…. வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்) முறையில் வழங்கும் புதிய திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுவரை சிப் பொருத்தப்பட்ட அட்டைகளுக்காக ரூ. 250 கட்டணம் செலுத்தப்பட்டு, தபால் மூலம் வந்து சேர ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டே, தாங்களே இணைய வழியில் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் இச்சேவை கொண்டுவரப்படுகிறது.

இப்புதிய நடைமுறையின் கீழ், புதிதாக வாகனம் வாங்குவோர் தங்களின் டிஜிட்டல் ஆர்.சி. (RC) சான்றிதழை இணையம் வழியாக உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதேபோல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இச்சான்றிதழ்களில் இடம்பெறும் கியூஆர் (QR) குறியீட்டைச் சரிபார்ப்பதன் மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆவணங்களின் உண்மைத்தன்மையை நொடியில் உறுதிசெய்ய முடியும். இதனால் போலி ஆவணங்கள் நடமாட்டம் முற்றிலும் தடுக்கப்படும்.

   

மேலும், இந்த டிஜிட்டல் முறையினால் பொதுமக்கள் தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அச்சப்படத் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் மீண்டும் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. இது பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மீண்டும் மீண்டும் நாடுவதைக் குறைப்பதுடன், தேவையில்லாத அலைச்சலையும் பண விரையத்தையும் கணிசமாகக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

   

இதன் தொடர்ச்சியாக, ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை சார்ந்த அனைத்துச் சேவைகளுக்கும் மாநிலத்தின் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் (RTO) விண்ணப்பித்துப் பயன்பெறும் ‘எங்கும் பதிவு/உரிமம் வழங்குதல்’ செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய RTO விதிமுறைஎனும் சிறப்பு வசதியும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் போக்குவரத்து சேவைகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.