ORS என்று தவறாக விற்பனை செய்யப்படும் பல சாறுகள் மற்றும் எலக்ட்ரோரைட் பானங்களை உடனடியாக விற்பனையிலிருந்து அகற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் சற்று முன் FSSAI உத்தரவிட்டுள்ளது. உண்மையான ORS என்பது வயிற்றுப்போக்கு நோய்களின் போது நீரிழப்பை தடுக்கும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த மருந்தாகும். எனவே உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் பெற்ற ORS கலவைகளை மட்டுமே விற்க வேண்டும் என்று கூறியுள்ள FSSAI, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
