இனி தமிழ்நாட்டில் சாதாரண அரசு பஸ்களே கிடையாது… இனி எல்லாமே AC பஸ்கள் தான்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் இனிவரும் காலங்களில் வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட (AC) வசதியுடன் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவரும் சொகுசான ஏசி பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜய்யின் விருப்பம் என்றும், அதற்கேற்பவே இந்தத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், சாதாரணக் குக்கிராமங்களையும் முக்கிய மாநகரங்களையும் எளிதில் இணைக்கும் வகையில், போக்குவரத்துச் சேவைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.