புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேலி செய்து, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட ஜபல்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் முஸ்கான் சோனி அகில இந்திய பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் (AIDSA) இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேதன் அகர்வாலின் தோற்றம் குறித்து அவதூறான கருத்துக்களைப் பேசிய முஸ்கான் சோனி, தனது வீடியோவின் முடிவில் “ஹேஷ்டேக் ஐ ஹேட் மென்” (ஆண்களை வெறுக்கிறேன்) என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அகில இந்திய பல் மருத்துவ சங்கத்தின் மத்திய பிரதேச கிளை, தங்களது நடத்தை விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, முஸ்கான் சோனியை சங்கத்தின் பொருளாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
https://x.com/NCMIndiaa/status/2071853282671349773?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2071853282671349773%7Ctwgr%5E231aba173015d59465635ebd481ed2a4d772a565%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fviral%2Fjhooth-bologe-toh-maroge-na-dr-muskan-soni-suspended-by-aidsa-after-instagram-video-on-ketan-agarwal-murder-sparks-backlash
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, டாக்டர் முஸ்கான் சோனி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக மிகவும் வருந்துவதாகக் குறிப்பிட்ட அவர், அதே சமயம் “ஆண்களை வெறுக்கிறேன்” என்று தான் கூறிய கருத்தை நியாயப்படுத்தியும் பேசியுள்ளார். இந்த வார்த்தை ஒட்டுமொத்த ஆண்களையும் காயப்படுத்துவதற்காகக் கூறப்பட்டது அல்ல என்றும், தனது கடந்த கால வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடே அது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கேதன் அகர்வால் அவரது காதலி மற்றும் அவரது கள்ளக்காதலனால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த துயரமான சம்பவத்தை அநாகரீகமாக விமர்சித்த பெண் மருத்துவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இன்னும் கண்டனக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை.
