பெங்களூருவில் ஆட்டோ ஒன்றின் உள்ளே ‘மெட்டா’ (Meta) நிறுவனத்தின் அடையாள அட்டை (ID Card) தொங்கவிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயணி எடுத்த இந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுநரின் இருக்கைக்கு மேலே மெட்டா நிறுவனத்தின் லோகோவுடன் கூடிய ஐடி கார்டு இருப்பதைக்கண்டு இணையவாசிகள் வியப்படைந்துள்ளனர்.
தொழில்நுட்பத் துறையில் (Tech Industry) அண்மைக்காலமாக நடைபெற்று வரும் ஆட்குறைப்பு (Layoffs) நடவடிக்கைகளுடன் இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். “இந்த ஆண்டு ஆட்குறைப்பு நடவடிக்கை வேறு விதமாகப் பாதித்துள்ளது” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஒருவேளை அந்த ஆட்டோ ஓட்டுநர் முன்பு மெட்டா நிறுவனத்தில் பணிபுரிந்தவராக இருக்குமோ என்ற கேள்வியையும், கவலையையும் எழுப்பியுள்ளது.
இருப்பினும், அந்த அடையாள அட்டை உண்மையில் ஓட்டுநருடையதா அல்லது ஆட்டோவில் பயணம் செய்த யாராவது தவறுதலாக விட்டுச் சென்றதா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை. “ஐடி ஊழியர்களை விட ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்” என்றும், “மெட்டாவிலிருந்து ஆட்டோ வரை” என்றும் பலரும் இந்த வீடியோவிற்கு நகைச்சுவையாகவும், அதே சமயம் தற்போதைய வேலைவாய்ப்புச் சூழலை விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…