சீனாவில் மது அருந்திக்கொண்டே உணவு சாப்பிட்ட நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக 12 சென்டிமீட்டர் நீளமுள்ள சாப் ஸ்டிக்கை (Chopstick) அப்படியே விழுங்கிய வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விபரீதம், தற்போது அந்த நபருக்கு ஏற்பட்ட கடும் வலி காரணமாக முடிவுக்கு வந்துள்ளது.
சாப் ஸ்டிக் தொண்டையில் சிக்கியவுடன் மருத்துவமனைக்குச் சென்ற அந்த நபருக்கு, அதனை அகற்ற கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை மற்றும் கழுத்தை அறுக்க வேண்டும் என்ற பயத்தின் காரணமாக, அந்த நபர் சிகிச்சையைத் தவிர்த்துவிட்டு சுமார் 8 ஆண்டுகளாக அந்த சாப் ஸ்டிக் உடலுக்குள்ளேயே இருக்க அனுமதித்து வாழ்ந்து வந்துள்ளார்.
காலப்போக்கில் அந்த சாப் ஸ்டிக் உட்புற உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, தாங்க முடியாத வலியை உண்டாக்கியுள்ளது. வலியால் துடித்த அவர் மீண்டும் மருத்துவரை அணுகியபோது, ஸ்கேன் பரிசோதனையில் சாப் ஸ்டிக் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அந்த 12 செ.மீ நீள சாப் ஸ்டிக்கை வெற்றிகரமாக அகற்றி அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…