காதலாக மாறிய நட்பு… நோ சொன்ன 17 வயது சிறுமி… ஆத்திரத்தில் வீட்டிற்குச் சென்று வாலிபர் செய்த கொடூரம்..!

By Srimathi on ஆவணி 19, 2025

Spread the love

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அகில் (25). அகிலுக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் செல்போனில் பேசி வந்தனர். நாளடைவில் அகில், சிறுமியை காதலிப்பதாக கூறிய நிலையில், அதை ஏற்க மறுத்த சிறுமி அகிலுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அகில், தனது நண்பன் ராகுலுடன் (24) சேர்ந்து, நள்ளிரவில் சிறுமியின் படுக்கையறை ஜன்னல் மீது கல் வீசி எறிந்தார். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது, மேலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். அப்பொழுது மழை பெய்து கொண்டிருந்ததால், பெட்ரோல் குண்டு நனைந்து வெடிக்காமல், பெரும் விபத்து தவிக்கப்பட்டது.

   

இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி  கேமராக்களை ஆராய்ச்சி செய்த போலீசார், ராகுல் & அகில் இருவரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்ததாக, தகவல் வெளிவந்தது.