“வாடா… வெளிய போகலாம்…” தொழிலதிபரை அழைத்து சென்ற நண்பர்கள்… கடைசியாக காரில் கிடந்த சடலம்… 2 நாட்களுக்கு பின் அம்பலமான உண்மை…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் கலபுரகி நகரின் பிரம்மபூர் கனக நகரைச் சேர்ந்த சித்தலிங் சாவலாகி (35) என்ற ஹோட்டல் உரிமையாளர், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மாயமானார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கலபுரகி நகரின் வெளிப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளே அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், சித்தலிங்கை அவருக்குத் தெரிந்த நபர்களே காரில் அழைத்துச் சென்று இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சடலத்தைக் காரிலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையின் பின்னணியில் உள்ள காரணம் குறித்தும் கொலையாளிகளைப் பிடிப்பதற்கும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.