உத்திர பிரதேசம் மாநிலத்தில் காப்பீட்டு பணத்திற்காக போலியாக இறுதிச் சடங்கு நடத்தப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கா பகுதிக்கு நான்கு பேர் இறந்த உடலை தகனத்திற்கான கொண்டு வந்தார்கள். சடங்குகளின் படி இறுதிச் சடங்கு செய்வதற்கு உடனே நேரடியாக சிதைக்கு எடுத்துச் சென்று தகனம் தொடங்கப்பட்டது நால்வரும் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டதால் உள்ளூர்வாசிகள் அந்த தகனத்தை நிறுத்தி உள்ளார்கள். அப்ப பின்பு உடலில் இருந்து துணிகள் அகற்றப்பட்ட போது அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
यूपी –
2 युवक चादर में लिपटी एक वस्तु लेकर ब्रजघाट गंगा किनारे पहुंचे। उन्होंने शव बताया और पंडितों से अंतिम संस्कार कराने को कहा। विधिवत प्रक्रिया के दौरान शव के चेहरे पर पूजा सामग्री रखी जाती है। जैसे ही चादर हटाई, वो पुतला था। पुलिस ने दोनों हिरासत में लिए, पूछताछ जारी। pic.twitter.com/bc3JYhev4T— Sachin Gupta (@SachinGuptaUP) November 27, 2025
அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் உள்ளூர் வாசிகள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட டெல்லியில் சேர்ந்த துணிக்கடை நடத்தி வந்த கமல் சோமானி 50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து தப்பிப்பதற்கு கமல் சோமானி முன்பு தன்னுடைய பணிபுரிந்த அன்ஷூர் குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்பாக அன்ஸூர் பெயரில் 50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வாங்கி பிரிமியத்தை தவறாமல் செலுத்தி வந்துள்ளார் .
காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக அன்ஷூர் இறந்து விட்டதாக காட்ட போலி இறப்பு சான்றிதழை பெற்ற பிறகு நண்பர்கள் உதவியோடு தான் உடலை தகனம் செய்வதாக அனைவரையும் நம்ப வைத்து போலி இறுதிச்சடங்கு செய்ய முயன்றுள்ளார். தற்போது அன்ஷூர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனது பெயரில் பாலிசி இருப்பது தெரியாது என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து கமல் சோமானி மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
