துருக்கியில் இரண்டு நண்பர்கள் இணைந்து தெரு விலங்குகளுக்கு அளித்த உணவால் நூற்றுக்கணக்கான விலங்குகள் பயனடைந்துள்ள நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில், இரண்டு நண்பர்கள் இணைந்து செய்த சிறு உதவியால் இஸ்தான்புல் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான ஆதரவற்ற ஜீவன்களுக்கு வாழ்வளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகல் நேரத்தை விட இரவு வேளைகளில் இப்பகுதிகளில் ஏராளமான விலங்குகள் உணவுக்காகக் குவிவதாகவும், அந்த விலங்குகளுக்கு உதவ விரும்புபவர்கள் நேரில் வந்து உணவு மற்றும் பராமரிப்பு உதவிகளை வழங்கலாம் எனவும் அவர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தெரு விலங்குகள் அநாதையானவை அல்ல என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்ட இந்தப் பதிவு, விலங்கு நலன் மீது அக்கறை கொண்ட உலகளாவிய நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
