கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகன் செல்வராஜ் (35), அங்கு ஆட்டோ ஓட்டி வந்த சதீஷ் என்பவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். அப்போது சதீஷிற்கு செல்வராஜ் ₹500 கடனாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பேசுவதைத் தவிர்த்து வந்தனர்.
ஆனால், இருவரும் வழக்கமாகக் கூடும் அழகியமண்டபம் பகுதியில் உள்ள மதுக்கடையில், செல்வராஜ் போதையில் சதீஷிடம் கடன் பணத்தைத் திருப்பிக் கேட்டுத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று மதுக்கடையில் வைத்து, செல்வராஜ் ₹500 கடனை திரும்ப கேட்டு சதீஷை மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது நண்பரான மற்றொரு ஆட்டோ டிரைவர் சைஜூ ஆகிய இருவரும் சேர்ந்து செல்வராஜை சாலையில் தள்ளிவிட்டு, கட்டையால் சரமாரியாகத் தாக்கினர்.
படுகாயமடைந்த செல்வராஜை மருத்துவமனையில் சேர்த்ததைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில், தக்கலை போலீசார் சதீஷ் மற்றும் சைஜூ மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தவெகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்று…
தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றாக உள்ள சூழலில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் களம்…
'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…