‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் விஜயை ரூட்டு விட்ட இந்த நடிகை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்க..!

By Mahalakshmi on மே 11, 2024

Spread the love

நடிகர் விஜய், சூர்யா, தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படத்தில் தேவயானிக்கு முதலாக விஜய் சைட் அடிக்கும் கேரக்டரில் நடித்த பிரபலமானவர்தான் அபிநயஸ்ரீ. இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

 

   

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணகுமார் என்பவருக்கும் ஹேர் டிரஸ்ஸஸ் சரோஜாதேவிக்கும் மகளாக பிறந்துவர்தான் அனுராதா. 13 வயது இருக்கும் போது கே.ஜி ஜார்ஜ் என்ற இயக்குனர் அவரை படத்தில் நடிக்க பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களும் ஓகே சொல்ல 13 வயதில் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் அனுராதா. தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

 

ஐட்டம் பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் அனுராதா. சில்க் ஸ்மிதாவுக்கு இணையாக தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடனம் ஆடியவர். 80 மற்றும் 90களில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான பாடலுக்கு நடனமாடி இருக்கின்றார். இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு சதீஷ்குமார் என்ற நடன இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அபிநயஸ்ரீ என்ற மகளும், காளிசரன் என்கின்ற மகனும் இருக்கிறார்கள்.

இவரது மகள் அபிநயஸ்ரீ விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சப்தம், பந்தா பரமசிவன், கோவில்பட்டி வீரலட்சுமி, இயற்கை, ஆர்யா, பாலக்காட்டு மாதவன், இளமை ஊஞ்சல், ஸ்டிக்கர் உள்ளிட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி என பல மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை .பிக் பாஸ் தெலுங்கு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் முதல் வாரத்திலேயே வெளியேறினார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் டான்ஸ் நிகழ்ச்சிகளில் டான்சராகவும், கோரியோகிராபர் ஆகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி 20 ஆண்டுகளான ஆரியா திரைப்படத்தின் ரீ யூனியன் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிநயஸ்ரீ அல்லு அர்ஜுனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.