ஒத்த விளக்கு, ஒரே நிமிஷத்துல 2 லட்சம் காலி… வீட்டில் விளக்கேற்றிய பெண்… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… ஒட்டுமொத்த ஊரையே அலறவிட்ட சம்பவம்…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த சின்ன முனியசாமி என்பவருடைய மனைவி காளியம்மாள். இந்த தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் கார்த்திகை தீபத்திருநாளின் மூன்றாவது நாளை முன்னிட்டு நேற்று மாலை காளியம்மாள் அவர்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றும் போது வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் மீது ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பிரிட்ஜின் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தீ பற்றி பிரிட்ஜ் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களில் தீப்பற்றி கட்டில், பீரோ, மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் என அனைத்து பொருள்களிலும் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை ஒரு வழியாக மீட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மின்விபத்தில் சின்ன முனியசாமி வீட்டில் சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.