தமிழகத்தில் தவெக அரசு அமைய ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருவதால் கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், நிலைமையைச் சமாளிக்க அமைச்சர்கள் நேற்று சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இன்று காங்கிரஸ் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். எனினும், தவெகவினர் முதலமைச்சர் விஜய்யைப் பிரதமர் எனக் குறிப்பிட்டுப் பேசி வருவதே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் நிலையில், “தவெகவுடன் இனி கூட்டணி இல்லை” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
