“அண்ணா செத்துட போறான்”… பெண் தோழியிடம் பேசிய பாய் பெஸ்டி… பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து வீடியோ… தமிழகத்தையே அதிரவிடும் சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதி மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருக்கு பெண் தோழி ஒருவர் உள்ளார். இதனிடையே பிரபு என்ற நபர் சூர்யாவின் பெண் தோழியிடம் செல்போன் மூலமாக பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சூர்யா கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் பிரபுவை தாக்க தன்னுடைய மற்றொரு நண்பரான சாமிநாதன் என்ற சிவாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதன்படி பல்லடம் பேருந்து நிலையத்தில் மூவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்ட நிலையில் மது அருந்த ஆழத்துப்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளனர்.

அங்கு மது அருந்தி கொண்டிருந்த சமயத்தில் சூர்யாவுக்கும் பிரபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட சூர்யா மற்றும் சிவா ஆகியோர் பிரபுவை காலால் உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் மது பாட்டிலை உடைத்து பிரபுவின் கழுத்தில் வைத்து மிரட்டி வீடியோவாக தங்களுடைய போனில் எடுத்து வைத்தன. அந்த வீடியோவில், பிரபுவை சாமிநாதன் சரமாரியாக தாக்கும்போது சூர்யா, அண்ணா செத்துட்ட போறான் என்று கூறவே சாவட்டும் டா நான் கேஸ் வாங்கிக்கிறேன் என்று அச்சுறுத்தும் தோனியில் பேசி இருப்பார்.

   

தொடர்ந்து இந்த வீடியோ போலீசுக்கு கிடைத்ததால் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பிரபுவை தாக்கிய குற்றத்திற்காக சூர்யா மற்றும் சிவா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண் தோழியிடம் பேசிய பாய் பெஸ்டியை மிரட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.