இண்டிகோ நிறுவனம், விமான ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10000 மதிப்புள்ள டிக்கெட் வவுச்சர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் இண்டிகோவின் எதிர்கால விமானப் பயணங்களுக்கான கட்டணத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். இண்டிகோவால் கடந்த 3,4,5 ஆகிய தேதிகளில் விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித்தவித்த பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
நீங்கள் இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்து, உங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டிருந்தால், உங்கள் பயணச் சீட்டு எண்ணைக் (PNR number) குறிப்பிட்டு இண்டிகோ வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு வவுச்சரைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
